முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்துக்கள்

சிவனும் சக்தியும் சேர்ந்து
அர்த்தநாரீஸ்வரான நன்னாள் இன்னாள்
என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.
இராவணை அழித்த இராமன்
பதினான்கு ஆண்டுகால வனவாசம் முடித்து
அயோத்தி திருப்பிய நன்னாளைக் கொண்டாட
அந்நாட்டு மக்கள் தீபங்களை ஏற்றி
இத் திருநாளை கொண்டாடியதாக
இராமாயணம் கூறுகிறது.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்தபின்
அவ்வசுரனின் வேண்டுகோளுக்கு இணங்க
தீபாவளி கொண்டாடப் படுவதாகவும்
அவனது அன்னை பூமாதேவியின்
அவதாரமான சத்யபாமா
கிருஷ்ண பகவானிடம் வேண்டியதற்கிணங்க
நாம் ஸ்நானம் செய்யும்
எண்ணெயில் மாகாலெட்சுமியும்
நாம் ஸ்நானம் செய்யும்
ஜலத்தில் கங்காதேவியும்
எழுந்தருளி அருள்வதாக ஐதீகம்.
இத்தகு சிறப்பு மிக்க இந்நன்னாளில்
நம் வாழ்வை இருளச் செய்யும்
அகங்காரம், பொறாமை, கோபம்
ஆகியனவற்றை நீங்கி
நாம் ஒளிர தீபங்கள் ஏற்றி
இருள் நீங்கி ஒளி பெற வாழ்த்துக்கள்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

போனஸ் இல்லாத நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் முன்னதாகவே கிடைக்க வாய்ப்பு

           தலைமை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் அக்டோபர் மாத ஊதியத்தை முன்னதாகவே வழங்கி, தீபாவளி பண்டிக்கைக்கான செலவுகளுக்கு உதவ வேண்டி மனு கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியம் அக்டோபர் 25 ஆம் தேதியே கிடைக்க ஆவன செய்யும் பட்சத்தில், கிடைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது.  போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இரண்டாண்டுகளாக ஊதிய உயர்வும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேற்படிப்பிற்கான ஊக்க ஊதியமும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவைகள் அனைத்தும் விரைவில் கிடைக்குமா? என்ற கேள்வி அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அக்டோபர் மாத சம்பளத்தை அக்டோபர் 25 ஆம் தேதியே வழங்கிட தலைமையாசிரியர் சங்கம் வேண்டுகோள்


இணைய வழி கல்வி அறிமுகம் - பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்


செவ்வாய், 18 அக்டோபர், 2016

சாக்பீசில் ஓவியம் வரைந்து அசத்தும் ஆசிரியர் சபரிநாதன் - நன்றி NEWS 7 தொலைக்காட்சி


சாக்பீசை கொண்டு ஓவியம் வரையலாம் இது நாம் அறிந்த விஷயம் தான். ஆனால் சாக்பீசில் ஓவியம் வரையலாம் என்று அதனை செய்து காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் வேடச்சந்தூரைச் சேர்ந்த ஆசிரியர் சபரிநாதன்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே குஜிலியம்பாறையில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் சபரிநாதன் என்பவர் வித்தியாசமாக கரும்பலகையில் எழுத பயன்படும் சாக்பீசை கொண்டு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்து வருகிறார். இயற்கை காட்சிகள் முதல் தேச தலைவர்கள் வரை அனைத்தையும் அவர் சாக்பீசைக் கொண்டு வரைவதை பார்த்த மாணவர்களே அவரிடம் ஆர்வத்துடன் ஓவியம் பயின்று வருகின்றனர்.

கணினியின் வரவால் கடந்த பல ஆண்டுகளாக ஓவியக்கலை அழிந்து வருவதாகவும் அதனை சீர்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருடைய சாக்பீஸ் ஓவிய சாதனை மாவட்ட அளவில் மட்டுமே உள்ள நிலையில், உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க நோக்கில் ஒரு சாக்பீசில் ஆயிரம் அப்துல்கலாமின் உருவத்தை வரையும் பணியில் சபரிநாதன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்

தற்போது பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் தனக்கு போதிய வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் கேள்வி குறியாக வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்தும் விதமாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணியை வழங்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஓவியத்திறன் மேம்பாடு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி ?


பள்ளியில் துணைப் பாடங்களுக்கு ( சிறப்புப் பாடங்களுக்கு) வகுப்பு இருக்கு .. புத்தகமில்லே !


பாடக்குறிப்பு பதிவேடும்... அரசாணையும் ... - அகதி


தொழில்நுட்பத் தேர்வு முடிவு - கலை ஆசிரியர்கள் சந்தேகம்