முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் பற்றி


அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan) இந்திய அரசால் 2000-ம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதுமாக எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டு வருகி்றது. இந்த இயக்கம் 1-8 வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்த தொடங்கப்பட்டதாகும். இந்தியாவில் தொடக்கக் கல்வியினை அனைத்து மாணவர்களும் பெறும் வண்ணம் செய்தல் இதன் நோக்கங்களில் ஒன்று. செயல்வழி கற்றல் (ABL) மற்றும் ALM முறைகள் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றளவில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தாமாகவே பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த முறையின் சிறப்பாகும். இத்திட்டத்தின் கல்வி முறைகளில் ஆசிரியரின் பங்களிப்பு சிறிதளவே உள்ளது. மாணவர்கள் மிகவும் ஆர்வமோடு தங்களுக்கு உரிய அட்டையை தாங்களே வரிசையாக பயின்று பயன்பெறுகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம், 2017ஆம்ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது, கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்கடந்த 2002ம் ஆண்டு துவக்கப்பட்டது. பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும்பள்ளியில் சேர்த்து 2007ம் ஆண்டு 5ம் வகுப்புபடிக்க வைப்பது எனத், திட்டமிடப்பட்டது.பின், 2010ம் ஆண்டு வரை திட்டம் நீட்டிக்கப்பட்டது. 2002ம் ஆண்டு பள்ளியில் சேர்க்கப்பட்டஅனைவரையும் 2010ம் ஆண்டு எட்டாம் வகுப்புமுடிக்க வைப்பது என, முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் அனைவருக்கும் கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் முடிவு பெறுவதாக இருந்தது.இந்நிலையில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 2017ம் ஆண்டு வரை அனைவருக்கும்கல்வி இயக்கத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் தமிழ்நாட்டில் நிறைவு பெறவிருந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017ம்ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக