முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சாக்பீசில் ஓவியம் வரைந்து அசத்தும் ஆசிரியர் சபரிநாதன் - நன்றி NEWS 7 தொலைக்காட்சி


சாக்பீசை கொண்டு ஓவியம் வரையலாம் இது நாம் அறிந்த விஷயம் தான். ஆனால் சாக்பீசில் ஓவியம் வரையலாம் என்று அதனை செய்து காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் வேடச்சந்தூரைச் சேர்ந்த ஆசிரியர் சபரிநாதன்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே குஜிலியம்பாறையில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் சபரிநாதன் என்பவர் வித்தியாசமாக கரும்பலகையில் எழுத பயன்படும் சாக்பீசை கொண்டு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்து வருகிறார். இயற்கை காட்சிகள் முதல் தேச தலைவர்கள் வரை அனைத்தையும் அவர் சாக்பீசைக் கொண்டு வரைவதை பார்த்த மாணவர்களே அவரிடம் ஆர்வத்துடன் ஓவியம் பயின்று வருகின்றனர்.

கணினியின் வரவால் கடந்த பல ஆண்டுகளாக ஓவியக்கலை அழிந்து வருவதாகவும் அதனை சீர்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருடைய சாக்பீஸ் ஓவிய சாதனை மாவட்ட அளவில் மட்டுமே உள்ள நிலையில், உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க நோக்கில் ஒரு சாக்பீசில் ஆயிரம் அப்துல்கலாமின் உருவத்தை வரையும் பணியில் சபரிநாதன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்

தற்போது பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் தனக்கு போதிய வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் கேள்வி குறியாக வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்தும் விதமாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணியை வழங்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக