முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 3 அக்டோபர், 2015

பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள், நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.

'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டது. மேலும், 'இது போன்ற பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு மேம்படுத்தப்பட்ட தேர்வுநிலை தர ஊதியம் வழங்க வேண்டும்' என நிதித்துறை உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செவிசாய்க்கவில்லை. 

'தர ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என போராட்டங்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நடத்தி வருகிறது. மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ''900 பள்ளிகளில் தொழிற்கல்வி நடைமுறையில் இல்லை. 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 2007 முதல் காலியாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக