முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 11 மே, 2015

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து – தினதந்தி

பதிவு செய்த நாள்: திங்கள் , மே 11,2015, 6:05 PM IST

சென்னை, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிபதி குமாரசாமி இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவுவதாக அரசியல் அரங்கில் கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது, பதவி ஏற்பு விழாவுக்கு அப்போது குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்த நரேந்திர மோடி வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல்,2012 ஆம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக மீண்டும் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக