முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 12 மே, 2015

திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் மா. ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் ரா. காசிப்பாண்டியன் போராட்டத்தை துவங்கிவைத்து பேசினார். 


அப்போது பள்ளிக் கல்வித்துறையில் 2015-16ம் ஆண்டில் 500 ஆசிரியர் பயிற்றுநர் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமனற மதுரை கிளையின் தீர்ப்பின்படி 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிகை வலியுறுத்தி 32 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக