துறைவாரியான மானியக் கோரிக் கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை 15-ம் தேதிக்குமேல் கூட வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டம், கடந்த பிப்ரவரி 17-ம்தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சில தினங்கள் விவாதம் நடத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மார்ச் 25-ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஏப்ரல் 1-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே பேரவை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை எதிர்பார்த்து அதிமுகவினர் காத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து 15-ம் தேதிக்கு பிறகு சட்டப்பேரவையைக் கூட்டி மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய் திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன. இதற்கான அறிவிப்பு 11-ம் தேதிக்கு மேல் வெளியிடப்படும் என்றும், பேரவைக் கூட்டத்துக்கான ஆயத்தப்பணிகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும் கூறப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக