விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் வரும் புதன்கிழமை (13.05.15) சென்னையில் மக்களின் முதல்வர் அம்மா அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சேர்மன் திரு.சோலை.M.ராஜா அவர்கள் தலைமையில் நமது மாநில பொறுப்பாளர்கள் தலைவர் திரு.D.ரவிச்சந்தர், செயலர். திரு.T.தேவிச்செல்வம், பொருளாளர் திரு. V.பெரியதுரை தலைமை நிலைய செயலர் திரு. R.சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் திரு.ராஜா சுரேஷ் ஆகியோர் சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் வருகையை மாநில அமைப்பிடம் உறுதி செய்து கொள்ளவும்.
கோரிக்கைகள் :
- அனைத்து (5677) உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தப் படவேண்டும்.
- 6 முதல் 12 ம் வகுப்பு வரை விலையில்லா உடற்கல்வி பாடநூல் வழங்கப் படவேண்டும்.
- அனைத்து( 7589) உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் ( 6 to 10 ) 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப் படவேண்டும்.
- அனைத்து ( 3566) மேல்நிலைப் பள்ளி களிலும் ( +1 , +2 ) 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்த படவேண்டும்.
- ஆசிரியர்களின் மேற்படிப்பிற்கு ( M.Phil., P.hd.,) ஊக்க ஊதியம் ( Incentive )வழங்கப் பட வேண்டும்.
- அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு நிதியாக ரூபாய் 50,000 ஒவ்வொரு வருடமும் வழங்கப் படவேண்டும்.
- இரண்டு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் ( CIPE Men & Women) நிரந்திர பணியிடம் உடனே நிரப்ப படவேண்டும்.
- 32 மாவட்டத்திற்கும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நிரந்திர பணியிடம் உடனே நிரப்ப பட வேண்டும்.
- அனைத்து ( 38,468) ஆரம்ப., நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப் படவேண்டும்.
- உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலேயே நிரப்ப படவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக