கடந்த மார்ச் 2012 ல் 16549 பகுதிநேர
பயிற்றுநர்கள், சிறப்புப்பாடங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்டனர். அதற்கான
அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ல், இந்த 16549 தற்காலிக பகுதிநேர பணியிடங்களில்,
காலியேற்படுமாயின், ஒரு ஆசிரியருக்கு 4 பள்ளிகள் வரை பணியாற்ற வாய்ப்பளிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட அரசாணை எண் 186 நாள் 18.11.2014 ல் ஒரு
ஆசிரியருக்கும் இரு பள்ளிகள் வழங்கலாம் என மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட
அறிக்கை 2014 – 15 ல் 1380 பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வியாண்டில் 2000 க்கும் மேற்பட்டோர்
பணியினைத்துறந்ததாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாணைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது
ஒரு ஆசிரியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வாய்பளிக்கலாம்.
அவ்வாறு
வாய்ப்பளிக்கும் முன் ஒளிவு மறைவற்ற முறையில்
எந்தெந்த பள்ளிகளில் காலியிடம் உள்ளது ?
எந்த தேதி முதல் காலியிடம் ஏற்பட்டது?
அருகில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் அதே பாட
ஆசிரியர்கள் யார்? யார்?
என்பன போன்ற விவரங்கள் அனைத்து ஆசிரியர்களின்
பார்வைக்கும் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு
ஆசிரியருக்கும் பாதிப்பு இல்லாத கலந்தாய்வாக அது நடத்தப்பட வேண்டும்.
- செய்தித்தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக