பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் வழங்க அரசாணை சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் நிதி நிலையைக் காரணங்காட்டி, இந்த மாத ஊதியம் ( நவம்பர் 2014 ) ஊயர்த்தப்பட்டு வழங்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வந்ததும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் தனது செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்.
இக்கோப்பின் பி.டி.எப் வடிவம் அரசாணைப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஏழுமலை பாண்டியன் - முகநூலில் இருந்து
பதிலளிநீக்குஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களின் தொடர்ச்சியான முயற்சியால், கடந்த வாரம் அதற்கான அரசாணை பிறப்பி
பகுதி நேர க்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கான நிலுவை தொகையை நிறுத்தி வைத்து, திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடப்பு மாதம் மட்டும் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறுிவுறுத்தப்பட்டுள்ளது.
ssa திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில், மத்திய அரசு 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து தான் பகுதி நேர ssa ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்நிலையி்ல் நிதி நிலையை மேற்கோள் காட்டி, நிலுவை தொகையை நிறுத்தி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்.
ssaவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 2,400 கோடி என்ன ஆனது. எங்கே போனது. விலையில்லா ஆடு, மாடு, மடிக்கணினி, மிக்சி கிரைண்டர், மின்விசிறி என வழங்க மட்டும் அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளதா?
பணி நிரந்தரம் இப்போதைக்கு இல்லை என்றாலும், முன்தேதியிட்ட ஊதிய உயர்வு காரணமாக, சற்றே நிம்மதியடைந்திருந்த பகுதி நேர ஆசிரியர்களின் சந்தோஷம், ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
16,500 பகுதி நேர ஆசிரியர்களையும் சேர்த்து தான் 54,000 ஆசிரியர்களை ஒரே ஆண்டில் நியமனம் செய்ததாக, சட்டசபையில் மார்தட்டிக்கொண்டது இந்த அரசு. ஆனால், தங்களின் ஆட்சிக்காலத்தை பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமலே ஓட்டிவிட நினைப்பதும், அவர்களுக்காக, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதும், ......
அதை பிடுங்குமாம் அனுமான்...
பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்த அரசாணையில் உள்ள திருத்தம் 7, இதன் பொருள் என்ன?
பதிலளிநீக்குதேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தால், ஒரே ஆசிரியரை இரு பள்ளிகளில் பணியமர்த்தலாம், இரண்டு பள்ளிகளிலும் மூன்று அரை நாட்கள் பணி செய்ய வேண்டும். இரண்டு பள்ளிகளிலும் தலா 7,000 என 14,000 சம்பளம் வழங்க வேண்டும்.
15159 பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது உள்ளனர். 15,159 பள்ளிகள் தான் உள்ளனவா?
அப்படியானால், 15.150 பேருக்கும் இரண்டு அருகாமை பள்ளிகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுமா?
மீண்டும் ஒரு திருத்தம்...
பணி நியமன ஆரசாணையில், அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணியமர்த்தலாம் என்ற விதி, தற்போது இரண்டு பள்ளி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை நமது சங்க நிர்வாகிகள், கல்விச் செயலரை சந்தித்த போது, இப்போது இருக்கும் அரசாணைப்படி, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என கூறியதாக தெரிகிறது.
அந்த அரசாணைப்படி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை, ஒத்துக்கொள்ளலாம். அப்படியான்ல் அதில் திருத்தம் மேற்கொள்ள மட்டும் அவர்களால் முடிந்தது எப்படி?
பழைய ஆணையில் திருத்தம் மேற்கொண்டவர்களால், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய ஒரு புதிய அரசாணை பிறப்பிக்க முடியாதா?