முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.

தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்தார்.

அதை ஏற்று, 1,335 கூடுதல் வகுப்பறைகள், 184 ஆய்வகங்கள், மாணவர்களுக்கு, 270 கழிப்பறைகள், மாணவியருக்கு, 333 கழிப்பறைகள் மற்றும், 50 ஆயிரத்து 110 மீட்டருக்கு சுற்றுச்சுவர் ஆகிய உள்கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்த, அனுமதி வழங்கப்படுகிறது.இத்தகைய வசதிகள், நடப்பு கல்வி ஆண்டிற்குள், 248 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.இதில், 'நபார்டு' வங்கி நிதியுதவி மூலம், 149.34 கோடி ரூபாயும், தமிழக அரசு, 98.40 கோடி ரூபாயும் வழங்கும்.இவ்வாறு, செயலர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக