முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

வடகிழக்கு பருவமழை அறிகுறி: 3 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம்

a8eb9d37-f94e-4124-93ac-16cf638adcee_S_secvpf
வடகிழக்கு பருவமழை அறிகுறியால் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய துணை கண்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவ காலங்களில் நல்ல மழை பெய்யும்.
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும். இது படிப்படியாக முன்னேறி நாடு முழுவதும் பரவும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை ஜூன் மாத மத்தியில் தொடங்கியது. செப்டம்பர் மாதத்துடன் தென்மேற்கு பருவமழை முடிந்தது. தென் மேற்கு பருவ மழையால் இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நிரம்பியது.
அதன்பிறகு வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தற்போது தமிழகத்தின் மீதான மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே அடுத்த 3 நாட்களுக்கு (17, 18, 19–ந் தேதிகளில்) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும் பலத்த மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழைக்கான அறிகுறி தோன்றியுள்ளதாகவும், வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 20–ந் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. ஆனால் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்தது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் இன்று காலை மழை பெய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக