முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

பள்ளியில் வன்முறையை தவிர்க்க புதிய திட்டம்

பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது. 

இந்த வன்முறைகளை தவிர்க்க காந்திகிராம பல்கலையில் காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் துவக்கமாக காந்திகிராம பல்கலையில் பள்ளி வன்முறையை தவிர்த்தல் தொடர்பான பயிலரங்கம் நடந்தது. காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறைத்தலைவர் மணி வரவேற்றார்.

துணை வேந்தர் நடராஜன் பேசியதாவது: மாணவர்கள் நாட்டின் சொத்து. பள்ளிகள் ஆலயங்களுக்கு இணையாக கருதப்படுகிறது.

ஜாதி, மதம், இனம், பாலியல், போதை வாஸ்து போன்ற காரணங்களால் பள்ளி வன்முறை ஏற்படுகிறது.இதை தவிர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்களை ஒழுக்கத்தோடு வளர்த்தால், பள்ளியில் வன்முறை ஏற்படாது, என்றார். பேராசிரியர்கள் வில்லியம் பாஸ்கர், ரவிச்சந்திரன், மல்லம்மாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக