மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 100 சதவிகிதத்திலிருந்து 107 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் உயரவுள்ளதாக தெரிகிறது.
ஆனால் மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதியம் உயர்ந்தாலும், இவ்வியக்கத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வென்பது கானல் நீராகவே உள்ளது. அறிவிப்பு வந்த நிலையில் ஊதிய உயர்வாணை கிடைக்கப் பெறவில்லை. ஏப்ரல் 2014 முதல் ஆகஸ்டு 2014 வரை ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்படும் என எதிர்ப்பார்த்து ஏக்கத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு, தீபாவளி பண்டிகை வேறு வருகிறது.
பண்டிகைகளுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. இந்நிலை பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக