அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ளஅறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும்நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும்ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம்,வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும¢ ஒருதலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்கள், 9முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் பணியிடங்கள¢ வீதம் 900முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரம்பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஸீ31.82கோடி கூடுதல் செலவாகும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில்ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் 1:40 விகிதம் பின்பற்றப்படவேண்டும். பள்ளிகளின் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கு எம்.பி.,எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி பெற முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக