முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 2 டிசம்பர், 2013

அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நாட்காட்டி, 2013-14க்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்ட விடுமுறையைப் பட்டியலை உடன் வழங்க வேண்டும். 

மாவட்டத்தில் உள்ள பல யூனியன்களில், மூன்று சதவீதம் ஊதிய உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்தாமல், காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. 

இச்செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. உடனடியாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். 

இ.எம்.ஐ.எஸ்.,ல், மாணவர்களின் விவரங்கள், குடும்ப விவரங்கள், ஃபோட்டோ இணைத்தல், ஆதார் எண் விவரங்கள் போன்றவைகளை மேற்கொள்ள ஆகும் செலவை, பள்ளி அல்லது பராமரிப்பு மானிய நிதியில் செய்து கொள்ள, உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும். 

பள்ளி வேலை நாள் இல்லாத நாட்களில், எஸ்.எஸ்.ஏ., மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு, பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான வருகைச் சான்றும், அந்நாளுக்குறிய ஈடு செய்ய விடுப்பு அனுமதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக அரசின் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் ஊதியத்தில் கடந்த ஆண்டு, ஜூலை முதல், மாத சந்தாவாக, 150 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்துக்கான அடையாள அட்டையை, ஒரு சிலருக்கு மட்டுமே பெற்று வழங்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்று வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக