முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 2 டிசம்பர், 2013

பகுதிநேர ஆசிரியர்கள் நிலை

தமிழ் நாட்டில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ன் படி நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.5000 வழங்கப்படுகிறது. 

இவ்வாணையில் தேர்வுச் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு பள்ளியிலேயே பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது.

பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இவ்வாசிரியர்களுக்கு இதரப்படிகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் விலைவாசி உயர்வு இவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

பகுதிநேரப் பணிபோக பிற நாட்களில் பிற பணிகளில் ஈடுபட்டு வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இயலாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர்.

பகுதிநேரப் பணியாளர்களாக இவ்வாசிரியர்களைக் கொண்டு கல்வித்துறையும் இவர்களை பயன்படுத்தி மாணவர்களை சிறப்புப் பாடங்களில் முழுத்திறன் பெற சற்று சிரமப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையை ஆய்வுச் செய்யும் கல்வித்துறையும், தமிழக அரசும் விரைவில் பகுதிநேர ஆசிரியர்களின் நலனும் மாணவர்களின் நலனும் பேணப்படும் வகையில் நல்லதொரு முடிவெடுக்கும் என நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக