வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகிறது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று சென்னை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்தது.இன்று காலை முதல் நாகையிலும் மழை தொடர்ந்துள்ளது.
கனமழையைத் தொடர்ந்து காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை கல்வி இயக்குனர் வல்லவன் வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக