பெரம்பலூர் : ஜுன் மாதத்தில் விடுபட்டுப்போன 3 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர் பாக பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர், அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலரும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான கலா வள்ளி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
மனு விவரம் : அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வேளாண், தையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்டோர் 2012 மார்ச் முதல் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம். கடந்த ஜுன் 3ம் தேதி பள்ளி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் வெயிலால் திடீரென 2ம் தேதி மதியம் வந்த அறிவிப்பில் பள்ளிகள் 10ம் தேதிதான் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் 12நாட்கள் பணியாற்றி உள்ளனர். 12 நாட்கள் பணியாற்றியதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதிபடுத்திய நிலை யில் அரசாணை எனக்கூறி 9 நாட்கள் ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. எனவே, விடுபட்டுப் போன 3 நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில் சங்க மாவட்டச் செயலாளர்கள் சின்னசாமி, தினேஷ்குமார், செயற்குழு தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thanks - Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக