பெரம்பலூர்: தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பெரம்பலூரில் அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ.,விடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை, தையல், இசை, உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், வாழ்க்கை கல்வி போன்ற பல்வேறு துறைகளில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக கடந்த 2012 மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறோம்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி மறுதிறப்பு செய்யப்பட இருந்த நிலையில் பள்ளி திறக்கும் தேதி ஜூன் 10ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த சூழலில் பகுதிநேர ஆசிரியர்கள் 12 நாட்கள் பணியாற்றி உள்ளோம். ஆனால், ஒன்பது நாட்களுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாத ஊதியமாக ரூ.3,750 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எல்லாம் ஜூன் மாதத்திற்கான ஊதியம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்று நாட்களுக்கான மாத ஊதியத்தொகை ரூ.1,250ஐ எங்களுக்கு வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜூன் முதல் வாரத்திற்கான விடுமுறை நாட்களில் எந்தெந்த நாட்களில் ஈடு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் மூன்று சனிக்கிழமைகளில் ஈடுசெய்து பணியாற்றி உள்ளோம். இதுவும் ஏற்கப்படவில்லை. ஆகவே, தாங்கள் கூறும் மூன்று நாட்களில் பணியை ஈடுசெய்திட தயாராக உள்ளபட்சத்தில் ஜூன் மாதத்திற்கு உரிய ரூ.1,250 தொகையை உடனே வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks - dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக