முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 17 அக்டோபர், 2013

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு

By விழுப்புரம்,
First Published : 17 October 2013 04:05 AM IST

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசாணைப்படி பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த சங்கத்தின் மாநிலக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாநில இணைச் செயலர் பி.விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பிரசாரச் செயலர் ஆர்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில கெüரவத் தலைவர் சுந்தர் கணேஷ், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தமிழகத்தில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அரை நாள்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும். ஆனால், சில அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எங்களை 5 நாள்களும் முழுமையாக பணி செய்யும்படி வலியுறுத்துகின்றனர்.

அரசாணைப்படி எங்களை பணி செய்ய அழைக்க வேண்டும், மேலும், மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் போதுமானதாக இல்லை.

எனவே, எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாத இறுதியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Thnaks - Dinamani

1 கருத்து: