சேலம்: பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமர், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, ஆண்டு மார்ச், 5ம் தேதி தமிழகம் முழுவதும், 16 549 பேரை பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்தது.
மாதந்தோறும், 5,000 ரூபாய் சம்பளம் என்றும், வாரத்தில் மூன்று அரை நாள் பணி செய்ய வேண்டும் என்றும், அரசாணை வெளியிட்டது.
காலப்போக்கில், பள்ளி தலைமையாசிரியர்கள், எங்களை முழுநேர ஆசிரியராகவே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கம்ப்யூட்டர் ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுமாறு, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆனால், 5,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, எங்களை முழுநேர ஆசிரியர்களாக, அரசு நியமிக்க வேண்டும்.
சேலம், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர ஆசிரியர் சக்திவேல் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது குடும்பத்துக்கு, தமிழக அரசு, முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ஊதிய பட்டியல் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நேரத்தில் ஆவணத்தை கொடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், இந்த மாத இறுதியில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks - Dinamalar
சேலம்: பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
good
பதிலளிநீக்கு