திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையைச் சேர்ந்த ஓவியர் சு.செல்வம், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை பென்சிலில் செதுக்கி சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்தான்.
இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்து டாக்டர் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் பிறந்த நாளைத்தான் ஆசிரியர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து திருக்கோவிலூரை அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் மணலூர்பேட்டையைச் சேர்ந்த சு.செல்வம், பென்சிலில் ராதாகிருஷ்ணன் உருவப் படைத்தை செதுக்கி சாதனைப் படைத்துள்ளார்.
நன்றி - தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக