ஆர்.கே.பேட்டை:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இனி வங்கிக்கணக்கில் சம்பளம் செலுத்தப்படும். பாட குறிப்புகளை பராமரிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு வட்டார அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், நேற்று முன்தினம் பகுதி நேர ஆசிரியர்களுக்கான, முதல் கூட்டம் நடந்தது. இதில், பகுதி நேர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.
கடந்த ஆண்டு, மார்ச் 6ம் தேதி, தையல், ஓவியம், விளையாட்டு, கணினி, இசை உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய், தலைமையாசிரியர் மற்றும் கிராம கல்விக் குழு தலைவர் மூலமாக, சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில், வாரத்தில் மூன்று நாட்கள், மூன்று மணி நேரம் மட்டும் தங்களுக்கு, ஒதுக்கப்பட்ட பாடத்தை நடத்த வேண்டும். அதுகுறித்த, பாட குறிப்பு பதிவேடு, பராமரிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இனி, மாத சம்பளம், ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சம்பள உயர்வு மற்றும் பணியிட மாற்றம் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லாதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக