முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

வங்கியின் மூலம் மாத ஊதியம்: பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நன்றி

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு வங்கி கணக்குகள் மூலம் மாத ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க, சிவகங்கை மாவட்ட கிளைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஹெச்.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எம்.மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.துளசிதாஸ், துணைச் செயலர் தேவிகா, மாவட்டப் பொருளாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.பாபுஜி நன்றி கூறினார்.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் மாத ஊதியம் வழங்க அரசு ஆணை பிறப்பித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி - தினமணி

3 கருத்துகள்:

  1. உழைப்பின் பலன் கிடைத்த ஆனந்தம் . . . . நன்றி

    பதிலளிநீக்கு
  2. பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஈரோடு தினமணி நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி..........

    பதிலளிநீக்கு
  3. பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஈரோடு தினமணி நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு