முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

போராட தயாராகும் ஆசிரியர் கூட்டணி

திருப்பூர்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், போராட்ட ஆயத்த விளக்க கூட்டம், திருப்பூர் சி.எஸ்.ஐ., மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் துரை தில்லியப்பன் தலைமை வகித்தார். ஓய்வு பிரிவு மாவட்ட தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோசப் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார்.
"ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006ம் ஆண்டு ஜன., 1 முதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனத்தை அமல்படுத்த வேண்டும்.
"அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமி ழாசிரியர், வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் மறியல் மற்றும் போராட்டம் நடத்துவது குறித்து, கூட்டத்தில் விளக்கப்பட்டது.

Thanks - Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக