பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான முழு ஊதியத்தையும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 169 பேர் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிபுரிந்து, தொகுப்பூதியமாக மாதம் ரூ. 5 ஆயிரம் பெற்று வருகிறோம்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 12 நாள்கள் பணிபுரிந்த நிலையில், காலதாமதமாக ஜூன் 10-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதனால் 9 நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்க முடியும் என, பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழுமையான ரூ. 5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி ஜூன் மாதத்திற்கான முழு சம்பளத்தையும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனர்.
Thanks Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக