முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 8 ஜூலை, 2013

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர்கல்வித்துறை அமைச்சருக்கு மனு

ஈரோடு: ஈரோட்டில் நடந்த அ.தி.மு.க., இளைஞர் பாசறை கூட்டத்தில் பங்கேற்க வந்த, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரிடம், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மனு கொடுத்தனர்.ஈரோடு மாநகர மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்றார். முன்னதாக அவரை, தமிழ்நாடு அனைத் து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் சந்தித்து, மனு கொடுத்தனர்.

அம்மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர், 16 ஆயிரத்து 549 ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளார். கடந்த, 2012 மார்ச் மாதம் முதல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். பணிவரன் முறைகள் சரியாக வகுக்கப்பட்டாலு ம், அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், பணிவாய்ப்பு வழங்காமல், எங்கள் ஊதியத்தை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 2013 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத ஊதியம் முழுமையாக வழங்க, ஆவன செய்ய வேண்டும்.பகுதி நேர ஆசிரியர்கள் அதிகபட்சம் நான்கு பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கூடுதலாக துவக்கப்பள்ளியில், புதிய பணியிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புகளுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம் புதிய பணியிடங்களை உருவாக்கி, எங்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பாக வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டாக தரம் உயர்த்தப்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, காலமுறை ஊதியத்தில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக