முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 6 ஜூலை, 2013

யோசிச்சு பாருங்க…!

‘ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளிலும், உதவிப்பெறும் பள்ளிகளிலும் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களின் பணியும் செவ்வனே அமைந்திருப்பது இப்பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் மூலம் கண்கூடாகத் தெரிகின்றது. ஆனால் இவ்வாசிரியர்களின் ஊதியம் சொற்பத் தொகையாகவே உள்ளது. மேலும் இவ்வாசிரியர்களை ஊக்கப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என்ற நிலையிலும் அதிக தேர்ச்சி விழுக்காட்டை ஊக்கப்படுத்த அரசு முயற்சிக்கலாம்.

தேர்ச்சி சதவீதம் கணிக்கும் பொழுது பொதுத் தேர்வுகளாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளே கணக்கில் கொள்ளப்படுகிறது. அவ்வாறில்லாமல் அனைத்து வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். 

பொதுவாக தேர்ச்சி சதவிகிதம் குறைவாக உள்ள பாடங்களை கற்பிக்கும் பொழுது, மாணவர்களுக்கு சிறுவயது முதலே அப்பாடங்களை எளிமையாக கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பல்வகை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புப் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்தது வரவேற்கத்தக்கதே! ஆனால் அவர்களின் பணி பகுதிநேரப்பணியாக தற்காலிகப் பணியாக உள்ளது. இப்பாடங்களுக்குரிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் தயாரிக்கும் பணியும் முடியவில்லை. இக்குறைகளைப் போக்கி சிறப்புப்பாடங்களை செம்மைப் படுத்திட வேண்டும். 

அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகப்படுத்த, அர்ப்பணிப்பு உணர்வுடைய ஆசிரியர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமைத் தர வேண்டும். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இவ்விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ‘புதியதோர் உலகம் செய்வோம் அதற்கு பண்பட்ட மாணவர்களை உருவாக்கித்தருவோம் என்ற உணர்வு அனைவரது மனதிலும் எழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக