முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 24 ஜூலை, 2013

சிறப்பாசிரியர்களுக்கு முழு ஊதியம்

பெரம்பலூர் : பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை யில் நேற்று நடைபெற்றது. 

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், சின்னசாமி, சுதாகர், மகேஷ், சுரேஷ்குமார் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நல்லமுத்து, தினேஷ்குமார், பிரபாகரன், இளவரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டுவந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின்கீழ் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வேளாண்மை, தையல், இசை, உடற்கல்வி, ஓவியம், கணினி, வாழ்க்கைக் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்டோர் பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
 
தமிழக அளவில் 16,549 பேர் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் 3ம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்த பள்ளிகள், வெயில் கொடுமை காரண மாக 10ம் தேதி திறக்கப்பட் டது. இந்த சூழ்நிலையிலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 12 நாட்கள் பணியாற்றி இருக்கிறோம். இதனை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியும் 9 நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்க முடியும் எனக்கூறுவது பொருளாதார ரீதியில் சிக்கித்தவிக்கும் எங்களுக்கு வேதனையளிக்கிறது.

எங்களுக்கு ரூ.3,750 மட்டுமே ஊதியம் வழங்கப்படுமென தெரிகிறது. எனவே திருச்சி, திருவண்ணாமலை, கரூர், ஈரோடு உள்ளிட்ட இதர மாவட்டங்களில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு முழு ஊதிய மான ரூ.5,000 வழங்கியது போல பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் எங்களுக்கும் முழுஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக