இந்த ஆண்டு (2013-14) முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2011-12 ஆம் கல்வி ஆண்டில் 16,549 பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் பகுதிநேரமாகவும், தொகுப்பூதிய ஆசிரியர்களாகவும் இருக்கின்றார்கள்.
பல பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாகவும், சில பள்ளிகளில் அதாவது தற்போது புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் முழுநேரமாகவும், முழு ஊதியம் பெறுபவர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக