முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 25 ஜூலை, 2013

முழு ஊதியம் வேண்டி நாகை APSTA சார்பில் மனு

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், 22.07.2013 திங்கள் கிழமையன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.

அம்மனுவில், அரசு விடுமுறை மற்றும்  தேர்வுக்காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம், விடுப்பு எடுக்காத நிலையிலும்  பிடித்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

மனுவைப் படிக்க இணைப்பை சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக