மதுரை: "குடும்ப சூழ்நிலையை சமாளிக்க, மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும்,''
என்று, மதுரை முதன்மைக்கல்வி அதிகாரியிடம், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 200 பகுதிநேர ஆசிரியர்கள் தல்லாகுளம்
சி.இ.ஓ., அலுவலகம்
வந்தனர். அங்கு, மோகன், சாமுண்டீஸ்வரி தலைமையில், முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளியிடம்
மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்க கல்வி
அலுவலர்கள் கட்டாயத்தால், முழு நேரமாகத்தான் பணியாற்றுகிறோம். 12 அரை நாட்கள் பணியாற்றினால் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றி, கூடுதல் சம்பளம் பெறலாம் என்று, பணி நியமனத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதுபோன்ற வாய்ப்பு தரவில்லை. மே மாதம் சம்பளம் இல்லை என்ற போது
குடும்பம் பாதிக்கிறது. கருணை அடிப்படையில் மே மாதம் சம்பளம் வழங்க முதல்வர்
நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தகுதிகளும் உள்ள எங்களை பணி நிரந்தரம்
செய்யவேண்டும், என்றனர்.
anaiththu maavattamum inainthu amma vidam muraiyidalame...
பதிலளிநீக்கு