முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

நீலகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டிஅரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்  காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு அவர்கள் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவல் கல்வி மற்றும் தையல் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே மாதம் 3ம் தேதிக்குள் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

நன்றி - தினகரன் 
பதிவு செய்த நேரம்: 2013-04-22 11:48:09

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக