சென்னை மாவட்டத்தில் தற்காலிக
தொகுப்பூதிய பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
மூலம், நடப்பு கல்வியாண்டில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் 23-ஆம் தேதி
முதல் விநியோகிக்கப்படுகின்றன. அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் 6
முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 40 உடற்கல்வி
ஆசிரியர்கள், 12 ஓவிய ஆசிரியர்கள், 3 தையல் ஆசிரியர்கள், 4 இசை
ஆசிரியர்கள் மற்றும் 4 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அந்தந்த துறை ஆசிரியர்கள் இந்த பணிகளில் சேர
விண்ணப்பப் படிவங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும்
கல்வி இயக்க மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள்
இலவசமாகக் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு
மாதத்திற்கு 5,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி நாள்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - புதிய தலைமுறை
நன்றி - புதிய தலைமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக