முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கல்வித்துறையில் மறுமலர்ச்சி - அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு

கல்வித்துறையில் மறுமலர்ச்சி: 

அமைச்சர் வைகைச்செல்வன்

  "நமது கல்விதிட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதால், கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
            
            விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்த, அறிவியல் புத்தாக்க ஆய்வு ஊக்க நிதி,மாணவர்களின் தாய், தந்தை விபத்தில் இறந்தாலே,நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, 50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: கல்வித்துறைக்கு 16,965 கோடி ரூபாய் நிதியினை, முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்கள், நமது கல்வித்துறை திட்டங்களை அறிந்து செல்கின்றன.  இதன் மூலம் தமிழக கல்வித்துறை,  மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது, என்றார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "" இளைய தலைமுறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் ஞானியாக, முதல்வர் உள்ளார்,'' என்றார். 

        கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.  முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்தா, ஒன்றியத்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர்  மூக்கையா, நகராட்சித்தலைவர் சாந்தி,  துணைத்தலைவர் மாரியப்பன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

நன்றி
http://www.tnkalvi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக