தமிழக சட்ட சபையில் வரும் ஏப்ரல் 2ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் துறை, 3ம் தேதி சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை,
மாற்று திறனாளிகள் நலத்துறை, 4ம் தேதி உயர் கல்வித்துறை, 5ம் தேதி
வேளாண்மைத்துறை, 8ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, 19ம் தேதி
தொழில்துறை, 22ம் தேதி காவல் துறை, மே மாதம் 3ம் தேதி போக்குவரத்துத்துறை,
7ம் தேதி செய்தி துறை, 8ம் தேதி தொழிலாளர் நலன், 9ம் தேதி அறநிலையத் துறை,
10ம் தேதி பள்ளி கல்வித்துறை, 14ம் தேதி சுகாதாரத்துறை உள்ளிட்ட மானிய
கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதம்
முடிந்ததும், மே 16ம் தேதி அரசு சட்ட முன்வடிவுகள், இதர அலுவல்கள் ஆய்வு
செய்து நிறைவேற்றப்படும்.சட்ட சபை கூட்டம் தினமும் காலை 10மணிக்கு தொடங்கி
பகல் 2மணிக்கு முடியும். சபை நடவடிக்கைகளை பொறுத்து, கூட்டத்தின் நேரத்தை
சபாநாயகர் நீட்டிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக