முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றவேண்டும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு


  • தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
  • அந்த மனுவில் கூறி உள்ளதாவது:–உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி, இசை, வாழ்க்கை கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும்.
  • மே மாதம் சம்பளம் இல்லாமல் பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும்.
  • மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் போல எங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் வேண்டும்.
  • எங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடைப்பிடித்து வரும் பணி பதிவேடு முறையை எங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.
  • மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
                     நன்றி

                    தினதந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக