தர்மபுரி,: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாளாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு பகுதி நேர பயிற்றுனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதில் 15 ஓவிய ஆசிரியர்கள், 23 உடல்நலம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், 9 கைத்தொழிற் கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட 47 காலி பணியிடங்கள் உள்ளன.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 24ம் தேதி முதல் தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், கல்வி, சாதி சான்றுகள், முன்னுரிமை சான்று, வேலை வாய்ப்பு பதிவு அட்டை, சுயமுகவரியிட்ட தபால் கார்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் `5 ஆயிரம் வழங்கப்படும். இதர விபரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களை அணுகி பெறலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) மகேஸ்வரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நன்றி - தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக