பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில்
சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள்
விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் 2013&2014ம் கல்வியாண்டில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர மற்றும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியும், திறமையும் உள்ள பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 5ம், ஓவிய ஆசிரியர் பணியிடம் 4ம், தையல் ஆசிரியர் பணியிடம் 1ம், இசை ஆசிரியர் பணியிடம் 1ம், கணினி ஆசிரியர் பணியிடம் 2ம், வாழ்வியல் திறன் ஆசிரியர் பணியிடம் 1 என மொத்தம் 14 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பங்களை வரும் 27.4.2013 ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு பணி செய்ய விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல், கல்வி தகுதிச் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், பிறந்த தேதிக்கான ஏதேனும் ஒரு சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 27ந்தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக