சிவகங்கை
:
மே
மாத சம்பளம் வழங்க வேண்டும் என பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர
சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், கம்ப்யூட்டர்
பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012 மார்ச்சில் நியமிக்கப்பட்டனர். மாநிலம் முழுவ தும் சுமார் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மே
மாதம் பள்ளிகளுக்கு
கோடை விடுமுறை என்ப தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது. ‘நோ ஒர்க் நோ பே‘ என்ற அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம்
வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
வருடத்திற்கு 11 மாதங்கள் பகுதி நேர ஆசிரியர்களாக பணி புரிந்து விட்டு, ஒரு மாதத்திற்கு மட்டும் வேறு இடத்திற்கு அவர்களால்
வேலைக்கு செல்ல முடியாது. இதனால் அவர்கள் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே
இந்த ஆண்டாவது மே மாதத்திற்கும்
சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதிநேரச் சிறப்பாசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக