தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி ஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்தது. இவர்கள், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.
பகுதி நேரமாக இருந்தாலும் அரசு வேலை என்பதால், பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், பல ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தில் பணியாற்றிய முந்தைய பணிகளை உதறித் தள்ளிவிட்டு, இப்பணியில் சேர்ந்தனர். பெரும்பாலும், 40 வயதை கடந்தவர்கள்.
இவர்களுக்கு, கோடை விடுமுறையான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுதில்லை. "எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அரசு வேலை என்பதால் இங்கு வந்து சேர்ந்தோம். மே மாதம் மட்டும் சம்பளம் இல்லை. அந்த மாதத்தில் நாங்கள் எங்கே போய் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றுவது?
மே மாதம் பணிகள் ஒதுக்கினாலும் அதை செய்ய தயாராக உள்ளோம் அல்லது மே மாதத்தில் சம்பளம் வழங்கி, அதை ஈடுகட்டும் வகையில் வரும் மாதங்களில் வேலை நாட்களை அதிகரித்து கொள்ளலாம்" என பாதிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதை கருத்தை தமிழாசிரியர் கழக மதுரை செயலாளர் ஜெயக்கொடி, சட்ட செயலாளர் வெங்கடேசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் தென்னவன் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் முருகன், "பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலும் முழு நேரமாகவே பணியாற்றுகின்றனர். கருணை அடிப்படையில் மே மாத சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நன்றி - www.tnkalvi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக