ஊட்டி: ஊட்டியில் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடந்த போராட்டத்தில், 'தமிழகத்தில் உள்ள, 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் பிரிசில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை, 10:00 மணிமுதல், மாலை, 5:00 மணிவரை நடந்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பகுதிநேர ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக