முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 1 மார்ச், 2016

வாங்க... அனைத்து மாவட்டத்தினரும் வாங்க.. (02.03.2016) புதனன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வாங்க... - பொன்னேரியிலிருந்து முன்ஸ், 9790252499.

அனைவருக்கும் வணக்கம்.
இந்த வாரத்தில் நாம் அதிகம் பயன்படுத்திய இரு வார்த்தைகள் :

1. பகுதிநேர ஆசிரியர்கள்
2. DPI வளாகம்

அதற்கு காரணம் நாள்தோறும் படையெடுக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

அதற்காக நானும் ஓர் பகுதிநேர ஆசிரியர் என்ற முறையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விருப்பப்பட்ட நாளில் போராட்ட களத்திற்கு செல்கிறோம்.விருப்பப்பட்ட நாளில் வெளியேறுகிறோம். இதுவரை வந்து சென்றவர்களின் எண்ணிக்கை 1000 க்கும் அதிகம். ஆனால் அதிகாரிகளின் பார்வையில் எண்ணிக்கை 500 க்கும் குறைவு. அதனால் தான் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் கேட்டார் . கோரிக்கை 16549 பேருக்கு பொதுவானது என்கின்றீர்.ஆனால் வந்திருப்பதோ 500 க்கும் குறைவு.மீதம் உள்ளவர்கள் இந்த ஊதியம் மற்றும் பணியே போதும் என்று தானே வரவில்லை என்று.

நாம் தூக்கி எறிய நினைப்பது மிகப்பெரிய சுமை. ஒவ்வொருவராக தூக்கினால் அது இயலாது. அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கினால் நிச்சயம் நம்மால் இயலும்.ஆகவே, இதுவரை சில பேர் களம் சென்று திரும்பி இருக்கலாம்.சில பேர் செல்ல திட்டமிட்டு இருக்கலாம். 

உங்கள் முடிவு எதுவாயினும் பரவாயில்லை, நாம் அனைவரும் ஒரே நேரத்தில் களம் புகுந்தால் தான் நாம் வெற்றிக்கனியை பறிக்க இயலும்.ஆகவே அனைவரும் ஒன்றாய் களம் காண்போம் நண்பர்களே.

அதற்கான ஒரு சிறு விளக்கம்:
நண்பர்களே!!
முகநூலிலே 32 மாவட்டத்தை சார்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 100-300 ஆசிரியர்களை திரட்டினால் 32*100 =3200 அல்லது 32*300= 9600 ஆசிரியர்கள்.இந்த 9650 ஆசிரியர்களை ஒன்று சேர்த்து களத்தில் நிறுத்தினால்,இந்த எண்ணிக்கையே நம் வெற்றிக்கு போதுமானது. இதைச்செய்ய நிச்சயம் நம்மால் இயலும்.

இதை செய்வதனால் நமக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்பட போவது இல்லை. இதை ஒரு வேலை நாளில் செய்தால் நிச்சயம் நம் கோரிக்கை வெல்லும்.

நமக்காக தம் உயிரையே விட தயாராகஇருக்கும் நம் தோழர்களுக்காக நாம் நம் ஒருநாள் விடுப்பை தர தயங்கலாமா?

சிந்தியுங்கள் தோழர்களே!தேர்தல் நேரம் நெருங்கிறது.வெற்றி கனியும் நெருங்கிறது. 

வரும் (02.03.2016) புதனன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஒன்று திரள்வோமா???
நண்பர்களே தங்களின் கருத்துக்களை தவறாமல் பதிவிடவும்.
நன்றி…

உங்களுள் ஒருவனாக,
பொன்னேரியிலிருந்து முன்ஸ், 
9790252499. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக