முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக ஒழுக்கம் மற்றும் நற்பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 27, 28ல், பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சியை, மூன்று நாட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், 50 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக