பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் டாக்டர்.வே.மணிவாசகம் அவர்களை செந்தில் தலைமையில் சந்தித்தனர்.
தலைமை நிர்வாகிகள் பூந்தோட்டம் குபேர்(எ) மாதவன், பாளை மாரிமுத்து, பள்ளிகுப்பம் பாக்கியராஜ், பரங்கிபேட்டை செந்தில்குமார், புவனகிரி இளவரசன், அருண், ராமாபுரம் கோபாலகிருஷ்ணன்,காவாலக்குடி அய்யப்பன்,கராத்தே மாஸ்டர் சத்யராஜ் ஆகியோர்கள் சிதம்பரம் அவர்களது அலுவலகத்தில் 23.10.15 சுமார் 6 மணியளவில் நேரில் சந்தித்து தமிழ் ஆர்வலரான, மனிதநேய பண்பாளரான படைப்பாளரான மண்ணின் மைந்தன் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ் பல்கலை கழகம் அவர்களின் ஆசிரியப்பணியை, தமிழ்மொழி சிந்தனைகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியதை போற்றும் வகையில் நமது பெரு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டோம்.
தலைவர் அவர்கள் நமக்காக அனைத்து வழிகளிலும் பயனளிக்கும் வகையில் பாடுபட்டுவருவதாக நம்பிக்கை ஊட்டினார். நமது பணிநிரவல் யாவரும் பாதிக்காத வண்ணம் நியாமாக நடந்திட உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் என்ற நல்ல செய்தியை நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவே இதை பதிவு செய்கிறோம். நமது பணி நிரந்தம் வேண்டி நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்ட நிலவரங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டு நல்ல பல அறிவுறைகளையும், வழிகாட்டுதலையும் சொன்ன தமிழ் ஆர்வலர் அவர்களுக்கு உங்கள் அனைவரின் நன்றிகளை உரிய நேரத்தில் பகிர்ந்திட கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் செந்தில்(9487257203) கடலூர் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக