"ஜாக்டோ" அமைப்பு பள்ளிக்கல்வி "அக்.8 அன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்நிலையில் "ஜாக்டா" கூட்டுக்குழு தலைவர் திரு.இளமாறன் அவர்கள் இன்று (06/10/2015)காலை பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களை கோட்டையில் நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது அரசுக்கு "ஜாக்டா" அமைப்பின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அக்.8 அன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தங்கள் அமைப்பை சார்ந்த எந்த ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
ஏற்கனவே அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரசுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து போராட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ள நிலையில் "ஜாக்டா" அமைப்பும் பங்கேற்காது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக