முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 6 ஜூலை, 2015

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் - தினதந்தி

நெல்லை,

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பொதுக்குழு கூட்டம் :

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டமும், பணி நிறைவு பெற்ற மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. மாநில தலைவர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். செல்வின் வரவேற்று பேசினார்.

நிறுவனர் நல்லப்பன், அவைத்தலைவர் அரியநாயகம், பொதுச் செயலாளர் நேரு, பொருளாளர் செங்கோட்டு வேல், அமைப்பு செயலாளர் நாகராஜன், தலைமை நிலைய செயலாளர் செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் வரதன் ஆகியோர் பேசினார்கள்.
 
தொழிற்கல்வி படிப்பு :

கூட்டத்தில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவை தொடங்க வேண்டும். ஆகஸ்டு மாதம் 1–ந்தேதி சென்னையில் நடைபெறும் 1 நாள் போராட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

2003–க்கு முன்பு வரை பகுதி நேரம் மற்றும் முழுநேரமாக பணியாற்றி வரும் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் அவரவர் பணியாற்றிய பகுதி நேர பணிக்காலத்தில் 50 சதவீதத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களும் 2 ஊக்க ஊதியம் பெறத்தக்க வகையில் மற்ற பாடத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக