பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகதாஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பகுதிநேரமாக பணியுரியும் ஆசிரியர்களை முழுநேர ஊழியர்களாக அரசு அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசன், துணைத்தலைவர் இளவரசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக