தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் வீராசாமி, பொருளாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சென்னை ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும், தமிழக முதல்வருக்கு, முழு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலை தூரத்துக்கு சென்று பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாவட்ட உள் மாறுதல் தரவேண்டும்.
பகுதிநேர பயிற்றுனர்களின் பணி சார்ந்த கடமைகளும், பொறுப்புகளும் என சுற்றிறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்து அரசிடம் இருந்து அனுப்பப்படவில்லை. அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக